ஜூன் 3 ம் தேதி வரை கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை!!

ஜூன் 3ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 3 ம் தேதி வரை கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை!!

2008-14ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் ப.சிதம்பரம் இடம்பெற்று இருந்தபோது அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் சீனர்களுக்கு விசா பெற்று தருவதில் 50 லட்சம் ரூபாய் முறைகேடாக பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 

இது தொடர்பாக  கடந்த 17ம் தேதி டெல்லி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 10த்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிபிஐ விசாரணை காவலில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை கார்த்திக் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி கார்த்திக் சிதம்பரம் தரப்பில் டெல்லி  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும்  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.