குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. நெல்லை கோர்ட்டில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் நெல்லை மாவட்ட நீதிமன்றங்களில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை தொடங்கியது.

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. நெல்லை கோர்ட்டில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை

கொரோனா பாரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களும் நேரடி விசாரணைகளுக்கு தடைவித்து முக்கிய வழக்குகள் காணோலி காட்சி வாயிலாக நடந்து வந்தது. 
இதனைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள 18 நீதிமன்றங்கள்  மற்றும் நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளிலும் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களிலும் இன்று முதல் நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாதால் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக கைதிகள் பலத்த பாதுகாப்புடன் நெல்லை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நெல்லை நீதிமன்றத்திலும் 30 க்கும் மேற்பட்ட கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டனர் . இதுபோன்று பல்வேறு வழக்குகளிலும் நேரடி விசாரணை தொடங்கி நடைபெற்றது.  இரண்டு மாதங்களுக்கு பின் இன்று நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.