ஈரோடு (கி) இடைத்தேர்தல்: கூடுதல் 3 கம்பெனி துணை இராணுவப்படையினரை அனுப்ப முடிவு!

ஈரோடு (கி) இடைத்தேர்தல்: கூடுதல் 3 கம்பெனி துணை இராணுவப்படையினரை அனுப்ப முடிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் இத்தொகுதியில், மொத்தம் 83 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் 6 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில், 77 வேட்பு மனுக்கள் கொண்ட இறுதி பட்டியல் நேற்றைய தினம் வெளியானது.

இதையும் படிக்க : கள்ளக்காதலில் ஏற்பட்ட விரிசல்... ஆத்திரத்தில் வெட்டிய காதலன்...உயிரிழந்த கள்ளக்காதலி!

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இதுவரை 6 பறக்கும் படை அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கையாக 25 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஏற்கனவே பாதுகாப்புப் பணிக்கு 2 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்ப முடிவெடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து, 34 நட்சத்திரப் பேச்சாளர்களை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, பிப்ரவரி 19ம் தேதி முதல் 6 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.