நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பது குறித்து முடிவு - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பது குறித்து முடிவு - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

கள்ளக்குறிச்சியில் தாக்குதலுக்கு உள்ளான பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பள்ளியை திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வரும் 29-ஆம் தேதி வெளியாகும் தீர்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதற்கு முன்னதாக அப்பள்ளி அருகே உள்ள  5 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், மற்றும் தனியார் கல்லூரியில் காலியாக உள்ள 40 வகுப்பறைகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதற்கான சுற்றறிக்கை 2 அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்.