மரம் விழுந்து மாணவி உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

மரம் விழுந்து மாணவி உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த மாணவிகள் சுஷ்மிதாசென் மற்றும் இராஜேஸ்வரி இருவர் மீதும், நேற்றைய தினம் மரம் வேறோடு சாய்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இதையும் படிக்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் வருகை தந்த இபிஎஸ், கனிமொழி!

இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கு நிதியுதவி அறிவித்து செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர், மாணவி சுஷ்மிதா சென் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அவரை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை  அளிக்கவும், ஒரு இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.