"டேன்டீ தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும்" - ஆ.ராசா

தனியார் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக அரசு டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கனமழை...!

அப்போது பேசிய அவர், டேன்டீ தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும், ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். மேலும் தற்காலிகமாக பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், தனியார் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக அரசு டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.