கட்டுப்பாடுகளை மறந்த மக்கள்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா...

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஆறாயிரத்து 929 ஆக உள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளை மறந்த மக்கள்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்றைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 608 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 3 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929 ஆக உள்ளது.  சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் 294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 397 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.