“திமுக என்றால் முறைகேடு..! முறைகேடு என்றால் திமுக..!” - மத்திய அமைச்சர் எல். முருகன்

“திமுக என்றால் முறைகேடு..! முறைகேடு என்றால் திமுக..!” -   மத்திய அமைச்சர் எல். முருகன்

எங்கும் எதிலும் ஊழல்..!  ஊழல்.!! ஊழல்.!!  திமுகவிடம் மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ? என மத்திய அமைச்சர் எல். முருகன்  விமர்சித்துள்ளார். 

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதாவது:-  

எங்கும் எதிலும் ஊழல் ஊழல் ஊழல் திமுகவிடம் மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

சொந்தக் கட்சிக்காரரே குறை கூறும் ஒரு அவல நிலை திமுகவில் மட்டும் தான் நடக்க முடியும்.

உதகையில் புதிய கடைகளை கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டதில் முறைகேடு, இதை நான் சொல்லவில்லை திமுகவின் நகராட்சி கவுன்சிலரே சொல்கிறார், அதுவும் நகராட்சி கூட்டத்தில் பேசுகிறார். 

நகராட்சி தலைவர் நகராட்சி துணைத் தலைவர் ஆகியோர் குற்றச்சாட்டுக்கு சப்பை கட்டு கட்டுகிறார்கள்..!

திமுக என்றால் முறைகேடு..! முறைகேடு என்றால் திமுக..! என்பதற்கு இதுவே ஒரு பிரதான உதாரணம்.

வழக்கம் போல போலி திராவிட மாடலின் சாயம் கோட்டை முதல் - நகராட்சி வரை வெளுத்து போய் இருக்கிறது.

இது தான் உங்கள் திராவிட மாடலா முதலமைச்சர் அவர்களே...? என  வினவியுள்ளார். 

இதையும் படிக்க |  ”சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” - பிரதமர் மோடி