உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தி.மு.க..? மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தி.மு.க..? மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...
தமிழ கத்தில் ந கராட்சி, மாந கராட்சி மற்றும் 9 மாவட்ட ஊர கப் ப குதி களு க் கு தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங் கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை பணி போன்ற காரணங் களால் நெல்லை, தென் காசி, விழுப்புரம், கள்ள க் குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங் களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
 
இந்நிலையில், தமிழ கத்தில் ந கர்ப்புற மற்றும் 9 மாவட்டங் களு க் கான உள்ளாட்சி தேர்தலை, வரு கிற செப்டம்பர் 15-ம் தேதி க் குள் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற் கான ஆயத்தப் பணி களில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள ஆளுங் கட்சியான தி.மு. க. ஆயத்தமா கி வரு கிறது.
 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பா க மாவட்ட செயலாளர் களுடன் தி.மு. க. தலைவரும், தமிழ க முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்ள உள்ளார். மாலை 5 மணி க் கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங் கத்தில் கூட்டம் நடைபெறும் என தி.மு. க. பொதுச்செயலாளர் துரைமுரு கன் அறிவித்துள்ளார்.