“திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல” - ஆர்.எஸ் பாரதி

திமுக நெசவாளர் அணி தென் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது:-
வயிற்றுப் பிழைப்புக்காக மற்ற மொழிகளை பேசக்கூடாது எனக் கூறிய திமுக தற்போது முதல்வர் பேச்சை 13 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது குறித்து தமிழிசை பேசியது குறித்த கேள்விக்கு:
தமிழிசைக்கு திமுகவின் வரலாறு தெரியவில்லை. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. 1967-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம் அதற்காக நாங்கள் இந்தி பிரச்சார சபாவை இடித்து தள்ளிவிட்டோமா.
பெரியாரே ஹிந்தி பிரச்சார சபாவிற்கு சொந்த இடத்தை வாடகைக்கு விட்டார் என்பது வரலாறு. எந்த மொழிக்கும் நாங்கள் விரோதி அல்ல. ஆனால் எங்களிடம் எந்த மொழியை திணித்தால் அதைவிட மாட்டோம்.
பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தை தமிழக அரசு சின்ன பிரச்சனையாக கருதுவது குறித்த கேள்விக்கு:
“இதை சின்ன பிரச்சனையாக நாங்கள் கருதவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுத்துள்ளது. ஆனால் அங்கு அரசு அந்த வேலையை செய்கிறது. பாஜக அமைச்சர்களே செய்கிறார்கள். இங்கு நடப்பதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் உடனடிக்காக நடவடிக்கை எடுத்து பரிகாரம் தேடப்பட்டது”, என கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீதான ரைடு குறித்த கேள்விக்கு:
“குற்றம் புரிந்தவர்களே லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம். உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி. ஏழரை லட்சம் கோடிக்கு உலகத்திலேயே ஊழல் செய்தவர் பிரதமர்.
75 ஆண்டுகளில் இந்தியாவில் பல பிரதமர் இருந்திருக்கிறார்கள்; எந்த பிரதமரும் செய்யாத ஊழலை மோடி செய்திருக்கிறார். ஆகவே இதை பத்தி பேசுவதற்கு அவருக்கு யோகிதை இல்லை”, என்றார்.
இதையும் படிக்க | “மத்திய அரசுக்கு எதிராக வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் " - கே. எஸ் அழகிரி