திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி...சீமான் குற்றச்சாட்டு...!

திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு,எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எடுப்பது தான் அவர்களின் இயல்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி...சீமான் குற்றச்சாட்டு...!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,. 

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் மோடியை ஒரு facsit என தெரிவித்தார் ஆனால் தற்போது கருணாநிதி படம் திறப்பதற்கு குடியரசு தலைவரை அழைக்கின்றனர். தற்போது மருத்துவ கல்லூரிகளை திறக்க மோடியை அழைக்கின்றனர் அவர் வந்து திறந்தால் தான் திறக்குமா என கேள்விய எழுப்பிய அவர், திமுக எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு என சந்தர்ப்பவாத கட்சியாகவே செயல்படுகிறது என தெரிவித்தார் 

தொடர்ந்து பேசிய அவர் வெள்ளையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் பாதிப்பு அடையாமல் உள்ளது என கூறிய அவர்,   அரசு மக்களுக்காக கட்டிடங்கள் கட்டும்போது அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் இது போன்று நடைபெறுகிறது என்றும் மக்களுக்கான திட்டங்களில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது குறித்து பதிலளித்த அவர்:

பாஜக சார்பாக தமிழகத்தில் நடைபெறுவதை கண்காணிக்க கூடிய நபர்கள் தான் ஆளுநர்கள் எனவே இவர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.மேலும் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணாவும் கலைஞரும் கூறி இருந்தனர் ஆனால் ஆளுநர் தேவை என்பது போல ஸ்டாலின் செயல்பாடு உள்ளது என தெரிவித்த அவர் ஆளுநரை சந்தித்து விட்டு வரும் ஒவ்வொரு நேரத்திலும் அவர்களின் திட்டங்களை ஏற்று கொள்கிறார் என தெரிவித்தார்.