ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு அல்ல...

அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களை தேடி அரசு வரும் காலம் வந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு அல்ல...

அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களை தேடி அரசு வரும் காலம் வந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பழமை வாய்ந்த பெருக்க மரம் ஒன்று உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு, காது கேளாத முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 10 பேருக்கு  உபகரணங்களை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு கட்டாயமாக வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மையத்தை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறந்து வைத்த முதலமைச்சர், ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு அல்ல எனக் கூறினார். மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால், தமிழக அரசுக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி, மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.