தமிழக KV பள்ளிகளில் தமிழ் ஆசிரியரை நியமிக்க வேண்டும்.,53  சமஸ்கிருத ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் திமுக கோரிக்கை.! 

தமிழக KV பள்ளிகளில் தமிழ் ஆசிரியரை நியமிக்க வேண்டும்.,53  சமஸ்கிருத ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் திமுக கோரிக்கை.! 

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா என்பது ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் (MHRD) கீழ் நிறுவப்பட்ட ஒன்றிய அரசுப் பள்ளியாகும். இந்த பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றி செயல்படுகின்றனர். இந்த பள்ளிகளில் சமஸ்கிருதம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும், 9-ம் வகு்பபு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கும் பாடமாகவும் இருக்கிறது. அங்கு மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அங்கு மாநில மொழிகள் கற்றுத்தரப்படும். 

தற்போது தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. அதில் ஒரு பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருதம் கற்பிக்க 53 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.