செப்.16-ல் திமுக எம்.பி.கள் ஆலோசனைக் கூட்டம...நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு தயாராகும் திமுக!

செப்.16-ல் திமுக எம்.பி.கள் ஆலோசனைக் கூட்டம...நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு தயாராகும் திமுக!

மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமைமையில் சென்னை அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர்...!

மேலும், வரும் 18-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.