டி.ஐ.ஜி. விவகாரம் ; குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை! - அண்ணாமலை

டி.ஐ.ஜி. விவகாரம் ; குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை! - அண்ணாமலை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த டிஐஜி விஜயகுமார் குடும்பத்தில், ஒருவருக்கு குரூப் 'ஏ' அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படிக்க : "ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி!

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், போர்க்கால அடிப்படையில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிய அவர், காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டால் மட்டுமே காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்ததை குறைக்க முடியும் என்றார். 

இதனைத்தொடர்ந்து, கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.