நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில்அலைமோதும் மக்கள் கூட்டம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில்அலைமோதும் மக்கள் கூட்டம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே சென்னையில் தங்கி பணி செய்யும் மக்கள், சொந்த ஊர் சென்று வாக்களிக்க ஏதுவாக  சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர், நெரிசலை தவிர்க்க பயணிகள் ஏறியதும் பேருந்துகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தனர்.