அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...!

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...!

விடுமுறை நாள் என்பதால் அருள்மிகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்:

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். குடும்பத்துடன் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

சுவாமி மற்றும் அம்பாளை தரிசித்து சென்ற பக்தர்கள்:

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் அதிகாலை முதலே அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் சுவாமி மற்றும் அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.