இழப்பீடு வழங்காத போக்குவரத்து கழகம்; பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்! 

இழப்பீடு வழங்காத போக்குவரத்து கழகம்; பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்! 

விபத்தில் காயமடைந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த குடியாத்தம்- காட்பாடி வழித்தடம் அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானாது.

இதி்ல் கார்த்திக் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் கார்த்திக்கு கை மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நஷ்ட ஈடு கேட்டு குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அவருக்கு 7,74,890 ரூபாய் இழப்பீடு வழங்க சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தொகையை குடியாத்தம் அரசு பேருந்து பணிமனை வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இதுவரை பாதிக்கப்பட்டருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் குடியாத்தம் சார்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் காட்பாடியில் இருந்து  குடியாத்தம் பேருந்து நிலையத்திற்கு  வந்த அரசு பேருந்தை  நீதிமன்ற ஊழியர்கள் தங்கராஜ், பிரேமலதா தலைமையில் பேருந்தை ஜப்தி செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

விபத்தில் காயம் ஏற்படுத்தி இழப்பீடு வழங்காத பணிமனைக்கு நீதிமன்றம் உத்தரவின் பெயரில் அரசு பேருந்து சிறைபிடித்த சம்பவம் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:பாஜக ஐ.டி. விங்க் செயலாளரை கொடூரமாக தாக்கிய மாவட்ட செயலாளர்!