குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகளின் பெரும் சோகம்... கடும் மழையில் பொருட்கள் நனைந்து அவதி...

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் வெளியேற்றிய பொருட்கள் மழையில் நனைந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகளின் பெரும் சோகம்... கடும் மழையில் பொருட்கள் நனைந்து அவதி...

சென்னையை அடுத்த திருவொற்றியூர் அருவாள்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள 336 வீடுகளிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் ஒரு சிலர் வீடுகளுக்கு வாடகைக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். வாடகைக்கு வீடுகள் கிடைக்காதவர்கள் தங்களது வீட்டில் உள்ள பொருட்களை குடிசை மாற்று வாரிய வீடுகளின் உட்புற பகுதிகளில் சாலையோரங்களிலும் மற்றும் பூங்காக்களிலும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றனர்.  வழியில் எடுத்துவைத்த பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் கட்டில் பாத்திரங்கள் என அனைத்தும் மழையில் நனைந்தன. ஏற்கனவே வீடுகளை திடீரென மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மிகவும் வறுமையில் வாடியவர்கள் தற்பொழுது பொருட்களும் மழையில் நனைந்து சேதமடைந்ததால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.