கொரோனா 3ஆவது அலையா..? எதிர்கொள்ள அரசுத் தயார்... அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி...

கொரோனா 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார். 

கொரோனா 3ஆவது அலையா..? எதிர்கொள்ள அரசுத் தயார்... அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி...

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவிவந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதின் பேரில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பயணிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்து பொது மக்களிடம் முக கவசங்களையும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தனார்.

அதே போல் பேருந்தில் பயணம் செய்தவரகளிடம் முக கவசம் அணிவதன் குறித்து எடுத்துரைத்து அதற்கான ஸ்டிக்கரையும் பேருந்தில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு,  தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதார துறை சார்பில் கைகளை சுத்தம் செய்வது குறித்து செவிலியர்கள் மூலம் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழகத்தில் 2-வது அலையை திமுக தலைமையிலான அரசு சிறப்பாக கையாண்டு விரட்டியதாகவும், 3-வது அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்டம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.