மக்களின் அலட்சியத்தால் வந்த விளைவு... 3-வது நாளாக அதிகரிக்க தொடங்கிய கொரோனா...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மக்களின் அலட்சியத்தால் வந்த விளைவு... 3-வது நாளாக அதிகரிக்க தொடங்கிய கொரோனா...

தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த கொரோனா பாதிப்பு மூன்றாவது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்து 575 இல் இருந்து ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 22 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 607 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25 லட்சத்து 71 ஆயிரத்து 378 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதே சமயம், நேற்றும் கொரேனா பாதிப்பால், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 282 ஆக உள்ளது.  சென்னையில் புதிதாக 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 229 ஆக பதிவாகி உள்ளது.