அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா அறிகுறி... மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை...

ஆண்டிப்பட்டியில் அரசுப்பள்ளி மாணவிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா அறிகுறி... மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை...

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளில் 12ம் வகுப்பு படிக்கும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவியை ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்த மாணவியுடன் வகுப்பில் படித்த அனைத்து மாணவிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து சம்பந்தபட்ட வகுப்பு மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவ & மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவமனை மற்றும் அரசு பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மாணவிகளிடம் இன்று எடுக்கப்பட்ட கொரோனா சோதனையின் முடிவுகள் நாளை காலை தெரியும் என்பதால் அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆண்டிப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு சோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.