மீண்டும் கொரோனா கிளஸ்டர் உருவாகி அதிர்ச்சி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கொரோனா விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்  மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொரொனா பாதிப்பு 2 ஆம் அலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் மீண்டும் 2 இடங்களில் கிளஸ்டர் உருவாகி உள்ளது, ஒரு கோவில் திருவிழாவிலும் அதேபோல மாத சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து கொரொனா கிளஸ்டர் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கு தவர்வுகளுக்கு  பிறகும் கொரொனா தொற்று குறையவில்லை  தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை படிப்புகள் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.