அரசின் போர்கால நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

அரசின் போர்கால நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருவதாக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவுக்கு சித்தா, அலோபதி, ஹோமியோபதி, யுனானி மருத்துவ முறைகளிலும் சிகிச்சை அளித்து  வருவதால் தொற்று  பாதிப்பு  இனி படிப்படியாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக விளம்பரங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களை  அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.