பாஜக, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது ...! காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்...!! 

பாஜக, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது ...! காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்...!! 

பாஜக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துகிறது காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்


இபிஎப் (EPF) ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணியோசை எழுப்பி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பங்கேற்றார். இதில் குறைந்தபட்ச பென்சன் ரூபாய் 9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும், பென்ஷனர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், ''நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி சபை ஒத்தி வைக்கப்படுவது உண்டு.ஆனால் இந்த முறை ஆளும் பாஜக அமைச்சர்கள் கோஷமிட்டு சபையை ஒத்தி வைக்கும் நிகழ்வு நடந்தது'' எனக் கூறினார்.

மேலும், தங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைப்பவர்களின் பதவியை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது என குற்றம் சாட்டடிய அவர் அதற்கு உதாரணம் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு எனவும்  முன்னாள் மத்திய மந்திரிகள் பலரும் இன்றும் அரசு குடியிருப்பில் குடியிருக்கும் சூழலில் ராகுல் காந்தியின் அரச குடியிருப்பை அவசர அவசரமாக காலி செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதானி நிறுவனம் மீது புகார்களையும் குற்றசாட்டுகளையும் முன் வைத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அரசின் இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் திமுக அரசு இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...! அடுத்தது என்ன...?