கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

கே.எஸ். அழகிரி தலைமையில்  காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக்  கூட்டம்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் , வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது,  வாக்குச்சாவடிகளை பணிகளை முழுமை செய்வது, மண்டல் கமிட்டி அமைப்பது,  காமராஜர் பிறந்தநாளை அனைத்து வட்டாரங்களிலும், நகரங்களிலும் கொண்டாடுவது, 
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 காங்கிரஸ் கொடி அமைப்பதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் செய்திருக்கிற சாதனை,மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைத்தல், ஒரு சட்டமன்ற தொகுதியை கொண்ட மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ள மற்றொரு மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற தொகுதியை பிரித்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்த மாவட்ட கூட்டத்தில், மாநில செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார், மாநில துணைத்தலைவர்கள் கோப்பண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஊட்டி கணேஷ், ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், சென்னை மாவட்ட தலைவர்கள் முத்தழகன் எம்.எஸ்.திரவியம் டெல்லி பாபு ரஞ்சன் குமார், அடையார் துரை, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார், ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கன்னியாகுமரி மாவட்ட தலைவர்கள் பினூலால், நவீன் குமார், வேலூர் மாவட்ட தலைவர் டிக்காராம், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இக்கூட்டத்திற்கு முன்னதாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பு அரசு மாநில செயலாளர்கள் கடல் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க   | 5 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!!