காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்... மனுக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அதிரடி தீர்வு...

நாகர்கோவிலில் காவலர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்ற நிலையில் போலீசாரிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-போலீசாரின் சம்பள பிரச்சனை, இடமாறுதல் போன்ற மனுக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அதிரடி தீர்வு கொடுத்துள்ளார்.

காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்... மனுக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அதிரடி தீர்வு...

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர்.சைலேந்தர் பாபு அறிவித்தை தொடர்ந்து உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று தமிழகம் முழுவதும் காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் தங்களின் குறைகளை மனுக்களாக காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.

பின்னர் மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் போலீசாரின் சம்பள பிரச்சினை,இடம் மாறுதல் போன்ற மனுக்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் போலீசாரின் முக்கிய பிரச்சனைகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றி தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.