"மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு!

"மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு!

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் அண்ணாசாலை, எழும்பூர், கோடம்பாக்கம், அசோக்நகர், மந்தைவெளி, உள்ளிட்ட சென்னை நகரின் பெருவாரியான இடங்களிலும் திடீரென கனமழை பெய்தது. இந்நிலையில், இடைவிடாது மழை பெய்து கொண்டிருப்பதால், சென்னை மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார். இது போல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை என்றும், தாழ்வான பகுதிகளை கண்காணிக்கவும், விழுந்த மரங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், சுரங்கப்பாதைகளை தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!