கோவை, நீலகிரியில் 2 நாட்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரியில் 2 நாட்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழகம் மற்றும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் எனவும் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழகக் கடலோரப் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.