புதுக்கோட்டையில் சித்திரை திருவிழா....! வைர தேரோட்டம் கோலாகலம்....!

புதுக்கோட்டையில் சித்திரை திருவிழா....!  வைர தேரோட்டம் கோலாகலம்....!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. இந்த கோயிலின் புதிய வைர தேர் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர் செய்யும் பணி முழுமையாக நிறைவடைந்தது.

இந்நிலையில்,  நெம்மகோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு புதிய வைர தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது.  இந்த கோயிலின் புதிய வைர தேர் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர் செய்யும் பணி முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைரதேர் வெள்ளோட்ட விழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விநாயகரை வழிபட்டனர். இந்த வைர தேரானது கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து நின்றது. 

இதையும்  படிக்க  } மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா....!!!

மேலும் இந்த கோயிலின் சித்திரை திருவிழா வருகிற 25 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற உள்ளது. இக்கோவில் ஒன்பதாம் நாள் திருவிழாவான வைர தேரோட்டம்  (3/5/23) புதன்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   } கொள்ளிடம் ஆற்றில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுப்பு...!!