" பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்..." - அமைச்சர் தா. மோ. அன்பரசன்

" பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்..." - அமைச்சர் தா. மோ. அன்பரசன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களைச் சார்ந்த 1266 அங்கன்வாடி மையங்களில் 18878 கர்பிணி பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். ஒரு செக்டாருக்கு 50 கர்பிணி பெண்கள் என 49 செக்டாரைச் சார்ந்த 2465 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியானது,  செங்கல்பட்டு மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் மாவட்ட அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் காட்டாங்கொளத்தூர் வட்டாரத்தைச் சார்ந்த 350 கர்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவ்விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.