”மகளிருக்கான திட்டம் இலவசமல்ல, பொருளாதார புரட்சி” - முதலமைச்சர் உரை!

”மகளிருக்கான திட்டம் இலவசமல்ல, பொருளாதார புரட்சி” - முதலமைச்சர் உரை!

மகளிருக்கான திட்டம் இலவசமல்ல-பொருளாதார புரட்சி என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  

மாநில திட்டக் குழு கூட்டம்:

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் மாநிலத் திட்டக் குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலத்திற்கு தேவையான எதிர்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சார்ந்த சில கொள்கைகள் விரைந்து வகுத்து இறுதி செய்திடவுள்ளதாக தெரிவித்தார்.

இலவச பேருந்து திட்டம்:

தொடர்ந்து பேசிய அவர், மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளதாவும், இந்த இலவசப் பேருந்துத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். 

பொருளாதார புரட்சி:

மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டத்தை “இலவசம்” என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என  முதலமைச்சர் குறிப்பிட்டார்.