சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்...! தொடங்கி வைக்கிறார் முதல்வர்...!!

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்...! தொடங்கி வைக்கிறார் முதல்வர்...!!

தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 5,76,725 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உட்பட பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுத் தவிர உதவித்தொகை கோரி இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வருவாய்த்துறையால் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களில் தகுதியான ஒரு லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் பயனாளிகளின் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும் நிலை உள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக  நிதிநிலை அறிக்கையில் ரூ.5346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில், புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் பயனடைவோர்களுக்கான ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!