தமிழ்நாட்டு கோயில்கள்; பிரதமரின் கருத்திற்கு முதலமைச்சர் கண்டனம்!

தெலங்கானா மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டு கோயில்கள் குறித்து பொய்யான கருத்து தொிவித்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தொிவித்துள்ளாா். 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்நாடு முழுவதும் 52 வாரங்கள் நடத்தப்பட்ட வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தாா். 

பின்னா், அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசிய அவா், அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் தமிழ்நாட்டு மக்களை குழப்ப சிலர் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினாா்.

தெலங்கானா மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டு கோயில்கள் குறித்து பொய்யான கருத்து தொிவித்ததை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பொறுப்பு வாய்ந்த நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? என கேள்வி எழுப்பினாா்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோயில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும், வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யை பிரதமர் மோடி கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை பழமை மாறாமல் சீரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தவறா? என்றாா். 

இதில் அமைச்சா்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனா். 

இதையும் படிக்க: "காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்