முதலமைச்சர் தமிழ்நாடு சுற்றுப்பயணம்!!!

முதலமைச்சர் தமிழ்நாடு சுற்றுப்பயணம்!!!

தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நிறைவடைந்த திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் அவர் பங்கேற்று வருகிறார். நெல்லையில் இன்று காலை நடைபெற்ற விழாவில், 330 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு அவர் வழங்கினார். 

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்ற முதலமைச்சர், எட்டயபுரத்தில் உள்ள திலகரத்தினம் தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்டார். பின்னர், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சரிடம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க: கருத்துரிமையும் பறிக்கப்பட்டதா சவுதி அரேபியாவில்?? 45 வருடங்கள் தண்டனை அளிக்கப்பட்ட பெண்!!!!