தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதே இலக்கு - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு  உயர்த்துவதே இலக்கு - மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு:

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற  காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் உரை:

அதன் பிறகு மாநாட்டில் பேசிய முதலமைச்சர், தொழில் நிறுவனைங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளதாகவும், இதற்கு தொழில்துறை சிறப்பாக நிர்வகிக்கப்படுவதே காரணம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Freebies-and-history-Until-now-the-freebies-of-the-Tamil-Nadu-government

தொடர்ந்து பேசிய அவர், 2030ஆம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை  ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதே இலக்கு எனவும், அதை அடைய தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, பெருமளவில் வேலை வாய்ப்புகளை அளித்திடும் தொழில் முதலீடுகளையும்  ஈர்க்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து:

இந்த மாநாட்டில், 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் 37 ஆயிரத்து 450 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும், 5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.