உயர்கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை...கூட்டத்தில் இதுவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்..!

உயர்கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை...கூட்டத்தில் இதுவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்..!

மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை:

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து வரும் 30-ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்தும் துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/crime/They-beat-me-everyday-I-commit-suicide-due-to-depression

புதிய கல்வி கொள்கை:

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வர இருக்கிறது. ஆனால், மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்த கல்வி கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் ஏற்க முடியாது என்று திமுக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தொடர்ந்து, தமிழகத்திற்கு என பிரத்யேக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 30-ம் தேதி உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து  நடத்தபடும் ஆலோசனை கூட்டத்தில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டமானது, கடந்த 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.