தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா பயணம்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா பயணம்!

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்வின் சொந்த நாடான இங்கிலாந்தில், அவரின் ஊரில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை திறப்பதற்கு லண்டனுக்கு வருகை தர முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனை முதலமைச்சர் ஏற்ற நிலையில், வரும் ஜூலை மாதம் அமெரிக்கவில் உள்ள வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையும் முதலமைச்சர் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்கா பயணிக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கிற 50க்கும் மேலான தமிழக தொழிலதிபர்களை இணைத்து அவர்களை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன், அமெரிக்காவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான பயணத்திட்டம் விரைவில் இறுதியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.