நிதி நிலைமை குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நிதி நிலைமை குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 


கொரோனா 2வது அலையின் கோரத்தாண்டவம் காரணமாக, தமிழகத்தில்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர பெரு நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தி குறைந்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும், அதனை மேம்படுத்துவது தொடர்பாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கொரோனா நிவாரண நிதியான 4 ஆயிரம் ரூபாயில் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை வழங்குவது மற்றும் ஊரடங்கை சமாளிக்க தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.