திமுக அலுவலகம்.. "குட்டி அரண்மனையா".. வாங்க பாக்கலாம் - டெல்லியில் இன்று திறப்பு விழா!!

டெல்லியில் பிரமாண்ட திமுக அலுவலகத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

திமுக அலுவலகம்.. "குட்டி அரண்மனையா".. வாங்க பாக்கலாம் - டெல்லியில் இன்று திறப்பு விழா!!

தமிழகத்திலேயே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம்தான் கலை நயத்துடன் கூடிய ஒரு பிரமாண்ட மாளிகையாக உருவெடுத்தது. அதே வழியில் தற்போது திமுகவுக்கு இன்னொரு பெருமையாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரமாண்டமாக அண்ணா கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியுள்ளார்.

டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில்தான் இந்த புதிய மாளிகையை திமுக எழுப்பியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டே இதற்கான இடத்தை மத்திய அரசு ஒதுக்கி விட்டது. ஆனால் கடந்த ஆண்டுதான் கட்டுமானப் பணியை திமுக ஆரம்பித்து. தற்போது கட்டி முடித்து விட்டது.

இந்தக் கட்டடம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கி அனைத்துத் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 3 மாடிகளுடன் கூடியதாக உருவாகியுள்ள இந்த கட்டடத்தை கட்சி அலுவலகம் என்று சொல்வதை விட குட்டி அரண்மனை என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு பிரமாண்ட தூண்கள், அழகிய வடிவமைப்பு என அழகு மாளிகையாக இது உருவெடுத்துள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடியதாக அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திமுக கட்டியுள்ளது. இந்த கட்டடத்தின் முன் பகுதியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.