வெள்ளம் பாதித்த திருவள்ளூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

வெள்ளம் பாதித்த திருவள்ளூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில்  பெருக்கெடுத்த வெள்ளம், கரையோர பகுதிகளுக்குள் புகுந்ததது.

இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். முன்னதாக வடிவுடை அம்மன் நகரில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் இருகரையையும் தொட்டு செல்லும் வெள்ள நீரை முதலமைச்சர் பார்வையிட்டார்.

 வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள மகாலட்சுமி நகர், மணலி புதுநகர், மணலி, சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.