மின் கட்டணம்: 100 கோடிக்கு பாக்கி வைத்துள்ள சென்னை மாநகராட்சி! 20 மாதத்திற்குள் கட்ட உத்தரவு!  

மின் கட்டணம்: 100 கோடிக்கு பாக்கி வைத்துள்ள சென்னை மாநகராட்சி! 20 மாதத்திற்குள் கட்ட உத்தரவு!  

சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிலுவை வைத்துள்ள 100 கோடி ரூபாய் மின் கட்டணத்தை, 20 மாதங்களுக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செலுத்துமாறும், உள்ளாட்சி அமைப்புகள் வைத்திருக்கும் பழைய நிலுவைத் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் மின்வாரியம்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள தொகையை, மாதம் 5 கோடி ரூபாய் வீதம் 20 மாதங்களுக்குள்ளாக செலுத்த சென்னை மாநகராட்சிக்கு, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் நிலுவை வைத்திருக்கும் மின் கட்டணம் குறித்து கண்காணிக்கவும், வசூலிக்கவும் அனைத்து விவரங்கள் அடங்கிய தகவல் பலகை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக பயனற்ற மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க:பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?