தடுப்பூசி செலுத்த ஆர்வம்... அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை... மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் 20882 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்த ஆர்வம்... அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை... மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரே நாளில் 20882 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களின் இன்று ஒரே நாளில் 20882 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பாக, கோவிசீல்ட் தடுப்பூசி முதல் தவணை 10842 நபர்களும், இரண்டாம் தவணை 4410 நபர்களும் செலுத்தியுள்ளனர்..அதேப்போல், கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை 2574 நபர்களும், இரண்டாம் தவணை 3056 நபர்களும் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2430 நபர்களுக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் 2420 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.