பொது விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரை இயங்கும்... ஜனவரி 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...

அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரை இயங்கும்... ஜனவரி 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...

ஜனவரி 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவை, நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வார நாட்களில் வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், கூட்ட நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.