சந்திரயான் - 3 செயற்கைக்கோள்,... இந்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்...! - இஸ்ரோ .

சந்திரயான் - 3  செயற்கைக்கோள்,... இந்த ஆண்டு விண்ணில் ஏவ  திட்டம்...! - இஸ்ரோ .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ இணை இயக்குனர் எஸ் வி சர்மா, இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான் -3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓசூரில் தனியாருக்கு சொந்தமான அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி என்ற பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனி திறமைகளை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த பள்ளியில் பயின்று கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள் மற்றும் தனி திறமைகள் விளையாட்டு போன்றவைகளில் சிறந்து விளங்கி வரும் மாணவ மாணவிகளை கௌரவித்து சிறப்பிக்கும் விதமாக உதவித்தொகை ரொக்கப் பணமாக வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கிய  மாணவ மாணவிகள் 45 பேர் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் 10 பேர் மற்றும் பள்ளியின் நிறுவனர் சார்பில் வழங்கப்படும் சிறப்பு பரிசு தொகை ஒருவருக்கும் என மொத்தம் 56 மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் மொத்தம் ஒரு கோடியே நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இஸ்ரோ இணை இயக்குனர் எஸ் வி சர்மா மாணவ மாணவிகளுக்கு வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து மாணவர்கள் இடையே பேசும் பொழுது ஒவ்வொரு மாணவ மாணவிகளும் சுய சிந்தனையில் திறமைகளை வளர்த்துக் கொண்டு அவர்களாகவே செயற்கை கோள் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் நிறுவனர் அஸ்வத் நாராயணன் கூறும் பொழுது எந்த தனியார் பள்ளியோ நிறுவனமோ இதுபோன்று குழந்தைகளில் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக உதவித்தொகைகள் வழங்காத நிலையில் நமது பள்ளியில் இதைவிட மேலாக தொடர்ந்து இது போன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ இணை இயக்குனர் டாக்டர் எஸ் வி சர்மா தெரிவிக்கும் பொழுது, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இது போல உதவி தொகைகளை வழங்கி உள்ள பள்ளியை மனதார பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை பெறும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிக்க    }  கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம்...!

மேலும் சந்திரயான் -3 செயற்கைக்கோள் பணிகள் இறுதி இடத்தை அடைந்து விண்ணில் ஏவுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான சரியான தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க    }  தமிழக அரசின் ஏடிஎம் மது விற்பனை...கண்டனம் தெரிவித்த எடப்பாடி!