4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

மதுரை, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் வரும் 12-ந்தேதி வரை தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று மதுரை, நெல்லை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.