தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட  7  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க : மொழியில் சிக்கிய குஷ்பு...தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் சினிமா பிரபலங்கள்...!

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணி்த்துள்ளது.