தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் மத்திய அரசு... ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மத்திய அரசு மீண்டும் தடுமாறுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி திட்டத்தில் தடுமாறும் மத்திய அரசு... ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மத்திய அரசு மீண்டும் தடுமாறுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோசுக்கான இடைவெளி 12 முதல் 16 வாரம் என்று பரிந்துரைப்பதற்கான முடிவு தவறானது என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே   எடுக்கப்பட்ட முடிவு இது என வெளிப்படையாக தெரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி இருப்பு அதிகரித்த பின்னும் அதனை குறைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் முன்கள பணியாளர்களை போல பாதிக்கப்பட கூடிய சூழல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை அனுமதிக்காததால், பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.