மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு மூக்கை நுழைக்க கூடாது - ப.சிதம்பரம்

மத்திய பாஜக தலைமையிலான அரசு, மாநில அரசின் விவகாரங்களில் மூக்கை நுழைக்க கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு மூக்கை நுழைக்க கூடாது -  ப.சிதம்பரம்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக கூட்டனி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இதுவரை ஒரு தப்பான அடிகூட எடுத்து வைக்காமல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடம் புரலாமல் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு ஓடி ஒலிந்திருந்ததாகவும் சாடினார். சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற இயலாது எனவும் கூறினார்.

அதேநேரம் மத்திய பாஜக தலைமையிலான அரசு, மாநில அரசின் விவகாரங்களில் மூக்கை நுழைக்க கூடாது என கூறிய அவர், மாநில மருத்து கல்லூரிகளில் உள்ள இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சேருவதை நீட் என்ற போர்வையில் மத்திய அரசு தடுத்து வருவதாகவும் சாடினார்.