கிறிஸ்தவர்களால் இன்று கல்லறைத் திருநாள் அனுசரிப்பு... கல்லறைத் தோட்டத்தில் மூதாதையர்களுக்கு அஞ்சலி...

கல்லறை திருநாளையொட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்காள் உயிரிழந்த தங்கள் முன்னேர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கிறிஸ்தவர்களால் இன்று கல்லறைத் திருநாள் அனுசரிப்பு... கல்லறைத் தோட்டத்தில் மூதாதையர்களுக்கு அஞ்சலி...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதியை இறந்தவர்களின் நினைவு நாளாகக் கடைபிடிக்கின்றனர். அதன்படி இன்று  கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது கல்லறைகளையும் சீரமைத்து, பூக்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி, மாலைகள் அணிவித்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மட்டுமின்றி சென்னை பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.  

இதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு  சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைத் தோட்டத்தில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.